118 என்ற பொலிஸ் துரித இலக்கத்துக்கு வழங்கப்படும் தவல்கள் விரிவுபடுத்தப்பட்டுள்ளது – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவிப்பு!
Saturday, January 13th, 2024
பொதுப் பாதுகாப்பு அமைச்சினால் ஸ்தாபிக்கப்பட்ட 118 என்ற பொலிஸ் துரித இலக்கத்துக்கு வழங்கப்படும் தவல்கள் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இதன்படி, தேசிய பாதுகாப்பிற்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அச்சுறுத்தல் ஏற்படுத்தக்கூடிய பயங்கரவாத மற்றும் தீவிரவாத செயற்பாடுகளையும் இந்த இலக்கத்திற்கு வழங்க முடியும்.
வழங்கப்படும் முறைப்பாடுகள் தொடர்பான விசாரணை சிறப்பு குழுவின் கீழ் இடம்பெறும். அதேநேரம், போலியான தகவல்களை வழங்கும் நபர்களுக்கு எதிராக சட்டம் அமுல்படுத்தப்படும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
உக்கிய தூண்கள் முறிந்து விழும் அபாய நிலையில் - காரைநகர் வீதியில் பயணிக்கும் மக்கள் அச்சம்!
நாம் ஆட்சிக்கு வந்தது கொழும்பிலிருந்து ஆட்சி செய்வதற்கல்ல – கிராம மக்களிடம் சென்று அவர்களின் தேவைகளை...
வெளிநாடு செல்லும் இலங்கையருக்கு தடுப்பூசி பெறுவது கட்டாயமானதல்ல - சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவிப...
|
|
|


