11,000 இற்கும் அதிகமான முறைப்பாடுகள் – உடனடியாக விசாரிப்பதற்கான வேலைத் திட்டத்தினை முன்னெடுத்துள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவிப்பு!
Wednesday, September 6th, 2023
மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பாக பொதுமக்களால் முன்வைக்கப்பட்ட 11,000 இற்கும் அதிகமான முறைப்பாடுகளை உடனடியாக விசாரிப்பதற்கான வேலைத் திட்டத்தினை முன்னெடுத்துள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அத்துடன் கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளில் சிலவற்றை பொதுச்சேவை ஆணைக்குழு, பொலிஸ் ஆணைக்குழு, தொழில் திணைக்களம், நுகர்வோர் விவகார அதிகார சபை ஆகியவற்றுக்கு அனுப்பிவைக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இவ்வாறு அனுப்பிவைக்கப்படும் முறைப்பாடுகள் உரிய நிறுவனங்களால் சரியான முறையில் விசாரணை செய்யப்படுகின்றனவா எனக் கண்காணிக்கப்படுமென மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளரும், சட்டத்தரணியுமான நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
அத்துடன் கிடைக்கப்பெற்றுள்ள அனைத்து முறைப்பாடுகளையும் உடனடியாக விசாரணை செய்வதன் மூலம், மக்களுக்கான நீதியை நிலைநாட்ட முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|
|


