10 மாதங்களில் ரயில் விபத்துக்களால் 180 பேர் பலி!
Thursday, November 23rd, 2017
இந்தவருடத்தில் இதுவரையான 10 மாதகாலத்தில் ரயில் விபத்துக்களில் 180 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாகரயில்வேதிணைக்களம் தெரிவித்துள்ளது.
வருடாவருடம் ரயில் விபத்துக்கள் அதிகரித்துவருவதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இவ்வருடத்தில் இது வரைவாகனங்களுடன் ரயில் மோதிய 84 சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. ரயிலில் இருந்துபயணிகள் விழுந்த 76 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
ரயில் தண்டவாளங்கள் அல்லதுதண்டவாளங்களுக்குகுறுக்காகபயணித்தபோது 436 விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன. வாகனங்கள் ரயில் குறுக்கு வீதிகளிலுள்ள வாயில்களில் மோதியமைதொடர்பில் 506 சம்பவங்கள் பதிவாகியுள்ளன எனவும் ரயில்வேதிணைக்களதகவல்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை,கடந்த 10 மாதங்களில் செல்பிஎடுக்கும் முயற்சியின்போதுரயில் விபத்துக்களில் சிக்கிபலியானவர்களின்எண்ணிக்கை 24 எனவும் அந்தத் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ரயில் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ரயில் குறுக்கு வீதிகளுக்கு அருகில் மக்களுக்கு தெளிவூட்டும் பதாகைகளை காட்சிப்படுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப் பட்டுள்ளதாகவும் ரயில்வே திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
Related posts:
|
|
|


