10 பாடங்களைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு 21 நாள்கள் முன்சேவைப் பயிற்சி !
Saturday, May 5th, 2018
வடக்கு மாகாணப் பாடசாலைகளுக்கு கடந்த 2017 ஆம் வருடத்தில் புதிதாக ஆசிரிய சேவை நியமனம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்களில் 10 பாடங்களைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு 21 நாள்கள் ஆசிரிய முன்சேவைப் பயிற்சி வழங்கப்படவுள்ளது என்று வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் செ.உதயகுமார் அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் அனுப்பிவைத்த செய்திக்குறிப்பில் உள்ளதாவது –
வடக்கு மாகாணப் பாடசாலைகளுக்கு கடந்த 2017 ஆம் வருடத்தில் புதிதாக ஆசிரிய சேவை நியமனம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்களில் உயிரியல், உயிரியல் தொழில்நுட்பம், இரசாயனவியல், பொறியியல் தொழில்நுட்பம், கணிதம், இணைந்த கணிதம், பௌதீகவியல், விஞ்ஞானம், விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் ஆகிய பாட ஆசிரியர்களுக்கான முன்சேவைப் பயிற்சி எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரையான 21 நாள்கள் யாழ்ப்பாணம் தொழில்நுட்பக் கல்லூரி, வட்டுக்கோட்டையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
எனவே குறித்த ஆசிரியர்கள் இப்பயிற்சி நெறியில் பங்குகொண்டு தமது சேவை நிரந்தரமாக்கப்படுதலுக்கு தேவையான அடிப்படைத் தகுதியைப் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்றுள்ளது.
Related posts:
|
|
|


