10 ஆயிரம் மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதி – பீ.ஹெரிசன்!

இந்நிலையில் அரிசி தட்டுப்பாட்டை தீர்ப்பதற்காக 10,000 மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சர் பீ.ஹெரிசன் தெரிவித்துள்ளார்.
அரசதுறை வர்த்தக நிலையங்களில் அரிசியின் விலை 10 ரூபா முதல் 15 ரூபா வரை அதிகரிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்த அமைச்சர் பீ.ஹெரிசன் சில வியாபாரிகள் அரிசிகளை பதுக்கி வைத்துக் கொண்டு விலையை அதிகரித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் பொதுச்சந்தைகளில் உள்ள கடைகளிலும் அரிசியின் விலை அதிகரிக்கப்பட்டிருப்பதாக நுகர்வோர் குறிப்பிட்டுள்ளனர்.
நத்தார் கொண்டாட்டம் நெருங்கி வருகின்ற நேரத்தில் அதிக நுகர்வோர் அரிசியை கொள்வனவு செய்ய முன்வருகின்ற நிலையில் அரசு தலையீடு செய்யாவிட்டால் அரிசியின் விலை மேலும் அதிகரிக்கலாம் என்று நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.
Related posts:
ஓரிரு நாளில் மரக்கறிகளின் விலைகள் குறையும்!
பிரதமர் ரணில் நோர்வே பயணம்!
வர்த்தக கப்பல் சட்டத்தில் திருத்தம்!
|
|