S.L.C இன் கணக்காய்வு அறிக்கை தொடர்பில் விசாரணை செய்ய விசேட குழு !
Wednesday, August 7th, 2019
இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தொடர்பில் கணக்காய்வு திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட கணக்காய்வு அறிக்கை விளையாட்டுத்துறை அமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கை தொடர்பில் விசாரணை செய்வதற்காக விரைவில் குழு ஒன்று நியமிக்கப்பட உள்ளதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ எமது செய்திப்பிரிவிடம் தெரிவித்துள்ளார்.
2016 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரையில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெற்ற நிதிப் பரிமாற்றங்கள் தொடர்பிலான கணக்காய்வு அறிக்கையை சமர்பிக்குமாறு விளையாட்டு அமைச்சர் கடந்த ஜனவரி மாதம் 28 ஆம் திகதி தெரிவித்திருந்தார். இந்நிலையிலேயே குறித்த அறிக்கை இன்று அமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
Related posts:
2019 சர்வதேச மெய்வாண்மை விளையாட்டுத்தொடர் டோஹாவில்!
கோரோனா காலத்தில் சேவை செய்யும் அரச உத்தியோகத்தர்களுக்கு விஷேட கொடுப்பனவு - அமைச்சர் ஜனக பண்டார தென்ன...
இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது இருபதுக்கு இருபது போட்டியில் தென்னாபிரிக்க அணி வெற்றி!
|
|
|


