23ஆம் திகதி முன்னிலையாகுமாறு பிரதமருக்கு அறிவிப்பு!
Friday, October 18th, 2019
அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல், மோசடிகள் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று முன்னிலையாக முடியாத காரணத்தினால், எதிர்வரும் 23ஆம் திகதி முன்னிலையாகுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆணைக்குழு அறிவித்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் சில நிகழ்வுகளில் பங்கேற்கின்றமையினால், இன்றைய தினம் தம்மால் ஆணைக்குழுவில் முன்னிலையாக இயலாது என பிரதமர் அறியப்படுத்தியதாக ஆணைக்குழுவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கமைய, எதிர்வரும் 23ஆம் திகதி ஆணைக்குழுவில் முன்னிலையாவதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தருமாறு பிரதமர் கோரியதற்கு, ஜனாதிபதி ஆணைக்குழு இணக்கம் தெரிவித்துள்ளது. தேர்தல் மேடையில் வழங்கிய வாக்குறுதிக்கு அமைய, மத்தள விமான நிலையத்தில் நெல்லை களஞ்சியப்படுத்த தீர்மானிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஆணைக்குழுவில் தகவல் வெளிப்பட்டுள்ளது.
இதற்கமைய, முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமைய, பிரதமருக்கும், அமைச்சர் தயா கமகேவுக்கும் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.
Related posts:
|
|
|


