159,92,096 பேர் வாக்களிக்கத் தகுதி – தேர்தல்கள் ஆணைக்குழு!
Wednesday, September 11th, 2019
நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலின்போது 2018 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியல் கருத்திற்கொள்ளப்படும் எனவும் இதன்படி, 159,92,096 (1 கோடியே 59 லட்சத்து 92 ஆயிரத்து 96) வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தலை எதிர்வரும் நவம்பர் மாதம் 9 ஆம் திகதி முதல் டிசம்பர் 9 ஆம் திகதிக்குள் நடத்த முடியும் எனத் தெரிவித்த அவர், பிரதான அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 17 பேர் தேர்தலில் போட்டியிடவுள்ளமை தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.
Related posts:
கட்சி மாறினால் பதவி பறிபோகும் - புதிய யோசனை!
தொடரும் சீரற்ற காலநிலை - டெங்கு, வயிற்றுப்போக்கு நோய் பரவும் அபாயம் அதிகரிப்பு என பொது சுகாதார பரிச...
நாடு முழுவதும் மரக்கறிகளின் விலை வெகுவாக அதிகரிப்பு - மக்கள் பெருங்கவலை!
|
|
|


