வேட்பாளர்கள் கொள்கைப் பிரகடனங்களை ப்ரெயில் முறையில் வெளியிட வேண்டும் – பப்ரல்!

விழிப்புலன் இழந்தவர்கள் வாசிக்கக்கூடிய வகையில், ஜனாதிபதி வேட்பாளர்கள் தமது கொள்கைப் பிரகடனங்களை ப்ரெயில் முறையில் வெளியிட வேண்டுமென பெப்ரல் அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.
விழிப்புலனற்றோர் இரண்டு இலட்சத்திற்கும் அதிகமானோர் நாட்டில் வாழ்வதாக சுட்டிக்காட்டியுள்ள பெப்ரல் அமைப்பு இவர்களும் ஜனாதிபதி வேட்பாளர்கள் கொள்கைப் பிரகடனங்களை அறிந்துகொள்ளும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதித் வேட்பாளர்களின் எதிர்காலத் திட்டங்கள் மற்றும் கொள்கைகள் தொடர்பில் அறிந்து கொள்ளும் உரிமை விழிப்புலனற்றோருக்கும் உள்ளதாகவும் பெப்ரல் அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.
Related posts:
முச்சக்கர வண்டி சாரதியின் உதவியால் கொலையாளியை கைது !
துறைமுக ஊழியர்களுக்கு 5,580 மில்லியன் ரூபா மேலதிக கொடுப்பனவாக செலுத்தப்பட்டுள்ளது - கோப் குழு தெரிவி...
வடக்கில் கொட்டித் தீர்க்கப்போகும் கனமழை -பலத்தகாற்று வீச வாய்ப்புள்ளதாக விரிவுரையாளர் நாகமுத்து பிர...
|
|