வாகன ஓட்டுநர்களுக்கு புதிய நடைமுறை !
Thursday, September 5th, 2019
அம்பலாங்கொட நகரில் வாகன நெருக்கடியை குறைக்கும் நோக்கில் 30 நிமிடங்களுக்கு அதிக நேரம் நிறுத்தப்படும் வாகனங்களுக்காக வரி அறவிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப அதிகாரிகளின் பரிந்துரைக்கு அமைய அரை மணி நேரத்திற்கு மேலாக நேரம் பேருந்து நிலைய பகுதியில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு இவ்வாறு வரி அறவிடப்படவுள்ளது.
மோட்டார் சைக்களுக்கு 20 ரூபாவும், கார் மற்றும் வான்களுக்கு 50 ரூபாயும் வரி அறவிடுவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பேருந்து மற்றும் லொறிகள் நிறுத்துவதனை தடை செய்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
நகரத்தில் ஏற்பட்டுள்ள வாகன போக்குவரத்து நெருக்கடியை குறைக்கும் நோக்கி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நகர சபை உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த பணத்தை அறவிடுவதற்காக நகர சபை அதிகாரிகள் நியமிக்கப்படுவார்களா? அல்லது பொருத்தமான நடவடிக்கை மேற்கொள்வதா என்பது தொடர்பில் எதிர்வரும் நாட்களில் தீர்மானிக்கப்படவுள்ளது.
Related posts:
|
|
|


