யாழ். குடாநாட்டை அசுர வேகத்தில் அச்சுறுத்தும் டெங்கு : வைத்தியர்கள் அசமந்தம் என மக்கள் குற்றச்சாட்டு!

Saturday, November 23rd, 2019

கடந்த இரு வாரங்களில் டெங்கு நோயின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் 750 நோயாளர்கள் சிகிச்சை பெற்றுள்ளனர் என யாழ். சுகாதார சேவைகள் தரப்பிலிருந்து தகவல்கள் கூறுகின்றன.

அத்துடன் குறித்த நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளர்கள் மருத்துவமனையில் உரிய முறையில் சிகிச்சை பெற்றுக்கொள்வதற்கு செல்லும்போதிலும் அங்கு பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர் என்றும் இந்த அவல நிலைக்கு தீர்வு கண்டு தருமாறும்  துறைசார் தரப்பினரிடம் குடாநாட்டு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தற்போது மழை காலம் என்பதால் டெங்கு நுளம்புகளின் பொருக்கம் அதிகரித்துள்ளது. வழமைபோல உரிய முறையில் பொதுச் சுகாதார பகுதியினரும் இது தொடர்பான பாதுகாப்பு முன்னேற்பாட்டு  நடவடிக்கைகள் எதனையும் முன்னெடுக்காது அசமந்தமாக இருந்துவருகின்றனர். இதனால் நுளம்பின் தாக்கம் உச்சம் பெற்று அதிகளவானவர்களுக்கு டெங்கு நோய் பரவி வருகின்றது.

அத்துடன் நோய்க்கான சிகிச்சைபெற வைத்தியசாலைகளுக்கு நோயாளர்கள் சென்றால் அங்கு வைத்தியர்கள் பற்றாக்குறை என்ற மாயை காண்பிக்கப்பட்டு நீண்ட வரிசையில் நோயாளர்கள் காத்திருக்கவைக்கப்படுவதாகவும் பொதுமக்கள் மற்றும் பொது நலன் விரும்பிகள் குற்றம் சுமத்துகின்றனர்.

எனவே இவ்வாறான அசமந்த போக்கை வைத்தியர்கள் கைவிட்டு நோயாளர்களின் நலன்கள் குறித்து அக்கறை செலுத்த முன்வர வேண்டும் என்பதுடன் இது தொடர்பில் துறைசார் தரப்பின் அதிகாரிகள் அதிக அக்கறை செலுத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related posts:


அனைத்து துறைகளிலும் நாட்டை தன்னிறைவடையச் செய்தல் வேண்டும் - பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வலியுறுத்து!
இலங்கையில் அறிமுகமாகும் புதிய விசா நடைமுறை அறிமுகம் - சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர...
அந்நியச் செலாவணிக்கு நிலவும் தட்டுப்பாடு தற்காலிகமானது - நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ தெரிவிப்பு!