பொலிஸாருக்கு எதிராக 4,161 முறைப்பாடுகள்!

Sunday, October 6th, 2019


பொலிஸாருக்கு எதிராக கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் இதுவரையான காலப்பகுதிவரை தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கு பொதுமக்களிடம் இருந்து நான்காயிரத்து 161 முறைப்பாடுகள் கிடைக்க பெற்றுள்ளன.

பொலிஸ் அதிகாரிகள் கடமைகளை உரிய வகையில் மேற்கொள்ளாமை, பக்கசார்பாக செயற்படுகின்றமை, தாக்குதல், சட்டவிரோதமாக கைதுசெய்தமை, முறையற்ற விதத்தில் விளக்கமறியலில் வைக்கப்பட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் அந்த முறைப்பாடுகளுகளில் அடங்குகின்றன.

அவற்றுள் மூவாயிரத்து 630 முறைப்பாடுகளுக்கு தீர்வு பெற்று கொடுக்கப்பட்டுள்ளதாக தேசிய பொலிஸ்ஆணைக்குழுவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதில் 20 முதல் 30 காவற்துறை அதிகாரிகளுக்கு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுகாவற்துறை அதிகாரிகளுக்கு ஏனைய அதிகாரிகளினால் அநீதி இழைக்கப்படுகின்றமை தொடர்பில் தேசிய காவற்துறை ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு செய்ய முடியும். பொலிஸார் தொடர்பான முறைப்பாடுகளை இணையத்தளம் ஊடாக முன்வைக்கும் வாய்ப்பு இருக்கின்றது. அத்துடன், 1960 என்ற இலக்கத்தின் ஊடாக முறைப்பாடுகளை முன்வைக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:


வடக்கில் தங்கியுள்ள பிற மாகாணத்தைச் சேர்ந்த 2 ஆயிரம் பேரையும் தற்போது அனுப்பும் சாத்தியம் இல்லை - ஆள...
அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுங்கள் – வர்த்தக அமைச்சருக்கு ஜனாதிபதி கோட்...
விமல், வாசு, கம்மன்பில ஆகியோரை பதவி நீக்கம் செய்யும் எண்ணமில்லை – ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தெரிவிப்ப...