பெயர்களில் திருத்தங்களை ஏற்படுத்த நடவடிக்கை – கல்வி அமைச்சு!

Thursday, September 5th, 2019


பாடசாலை உத்தியோகத்தர், சுகாதார உத்தியோகத்தர் மற்றும் காவலாளர் முதலான பதவிகளுக்கான பெயர்களில் திருத்தங்களை ஏற்படுத்த கல்வி அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதற்கமைய பாடசாலை உத்தியோகத்தர் பதவியை – சேவை உதவியாளர் பதவியாகவும், சுகாதார உத்தியோகத்தர் பதவியை – சுகாதார சேவை உதவியாளர் பதவியாகவும், காவல் பணியாளர் பதவியை – பாதுகாப்பு பணியாளர் பதவியாகவும் திருத்தம் செய்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, குறித்த பதவிகளை வகிக்கும் 4 ஆயிரத்து 766 பேரின் பெயர்களில் மாற்றம் ஏற்படவுள்ளது.

கல்வி அமைச்சின் செயலாளர் எம்.என்.ரணசிங்கவினால், முகாமைத்துவ சேவை திணைக்கள பணிப்பாளரிடம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

குறித்த பதவிகளுக்கான ஆட்சேர்ப்பின்போது, விண்ணப்பிக்கப்படும் எண்ணிக்கையானது, பதவி வெற்றிடங்களின் எண்ணிக்கையை விடவும் குறைந்த அளவில் உள்ளமையே இந்தப் பெயர் மாற்றத்திற்கு காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: