பால்மாவுக்கு வட் வரி நிவாரணத்தை வர்த்தகர்கள் வழங்கவில்லை – நுகர்வோர் மற்றும் சேமநல அமைச்சு!

அரசாங்கம் வழங்கிய வட் வரி நிவாரணத்தை இதுவரையில் பால்மாவுக்கு வழங்க வர்த்தகர்கள் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்று வர்த்தக, நுகர்வோர் மற்றும் சேமநல அமைச்சு தெரிவித்துள்ளது.
வட் வரி நிவாரணத்தின் அடிப்படையில் 400 கிராம் பால் மா பொதியின் விலை 15 ரூபாவினால் குறைக்கப்பட வேண்டும். என்று தெரிவித்துள்ள வர்த்தக, நுகர்வோர் மற்றும் சேமநல அமைச்சின் செயலாளர் ஜி.கே.எஸ்.என்.ராஜதாச, இது தொடர்பில அடுத்த வாரம் தொடக்கம் ஆராய நுகர்வோர் அதிகார சபைக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக கூறினார்.
இந்த நிவாரணம் ஜனவரி மாதம் முதல், புதியதயாரிப்புக்களுக்கு வழங்கப்படும் என்று பால்மா வர்த்தகர்கள் தெரிவித்திருந்த போதிலும் இதுவரையில் விலை குறைக்கப்படவில்லை என்றும் செயலாளர் குறிப்பிட்டார்.
Related posts:
வார இறுதியில் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு உள்ளிட்ட 12 மாவட்டங்களில் வாக்களிப்பு ஒத்திகை - தேர்தல்கள் ஆ...
பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் ஜனாதிபதி நடவடிக்கை – ஊடகப்பிரிவு தெரிவிப்பு!
யாழ்ப்பாணத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த தீப்பெட்டிகள், எரிவாயு சிலிண்டர்கள் பாவனையாளர் அதிகார சபைய...
|
|