பாதுகாப்பு தொடர்பில் புதிய ஜனாதிபதியின் முதலாவது நியமனம்!
Tuesday, November 19th, 2019
பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன நியமிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச புதிய பாதுகாப்பு செயலாளரை நியமித்துள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட 7வது ஜனாதிபதியாக கோத்தபாய பதவிப்பிரமாணம் செய்துகொண்டதன் பின்னர், வழங்கப்பட்ட முதலாவது நியமனம் இதுவாகும்.
மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, இறுதிப்போரின் போது, இராணுவத்தின் 53வது படையணிக்குத் தலைமைத் தாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
கடத்தப்பட்ட பிரபல இளம் வர்த்தகர் சடலமாக மீட்பு!
நெருக்கடியான நிலையை கட்டுப்படுத்த இராணுவம் - வடமாகாண முதலமைச்சரின் எச்சரிக்கை!
20 ஆவது சீர்திருத்தச் சட்டம் உயர் நீதிமன்றத்தால் நிராகரிப்பு!
|
|
|


