பாடப் புத்தகங்கள் தொடர்பில் கல்வி வெளியீட்டு ஆணையாளரின் முக்கிய அறிவிப்பு!
Thursday, December 5th, 2019
அடுத்த கல்வி ஆண்டுக்காக அச்சிடப்பட்டுள்ள பாடசாலை புத்தகங்களை, பாடசாலை ஆரம்பிக்கும் முதலாவது தினத்திலேயே மாணவர்களுக்கு வழங்குமாறு கல்வி வெளியீட்டு திணைக்கள ஆணையாளர் நாயகம் பாடசாலை அதிபர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
ஆயிரத்து 500 மாணவர்களுக்கு அதிகமாக கல்வி கற்கும் பாடசாலைகளுக்கு தற்போது, நேரடியாக பாடப்புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
ஏனைய அனைத்து பாடசாலைகளுக்கான பாடப்புத்தகங்கள் வலயக் கல்வி பணிமனைக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இந்த நிலையில், இது தொடர்பில் மேலதிக தகவல்களை அறிந்துகொள்ள வேண்டுமாயின், 0112 78 48 15 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்புகொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது
Related posts:
குறைந்தபட்ச ஆரம்ப கொடுப்பனவில் வீட்டு உரிமையை பெற்றுக் கொடுக்கும் முறையொன்றை உருவாக்குமாறு பிரதமர் ...
வடக்கில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை - சுகாதார சேவைகள் பணிப்பாளர் உத்தரவு!
நாவற்குழி உணவுக் களஞ்சியசாலையை பல்பொருள் விற்பனை நிலையமாக புனரமைக்க வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்...
|
|
|


