பாடசாலை மாணவர்களுக்காக டெப் கணனி, சுரக்ஷா காப்புறுதி !

Friday, November 29th, 2019

பாடசாலை மாணவர்களுக்கு டெப் கணனி வழங்குதல் மற்றும் சுரக்ஷா காப்புறுதியை நடைமுறைப்படுத்துவது உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது இதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சரவை ஊடக பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன நேற்று தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இன்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போது அமைச்சர் பந்துல குணவர்தன இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில் கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெருமவினால் இது தொடர்பாக நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டதாகவும் கூறினார்.

இதற்கு அமைவாக கடந்த அரசாங்கத்தினால் பாடசாலை மாணவர்களுக்கு வழங்குவதற்கு திட்டமிடப்பட்ட டெப் கணினியை வழங்குதல் மற்றும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சுரக்ஷா என்ற காப்புறுதியும் தற்காலிகமாக இடை நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டதாகவும் கூறினார். இந்த டெப் கணனியை வழங்குதல் மற்றும் சுரக்ஷா கப்புறுதியை வழங்குவது தொடர்பிலும் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளது என்றும ;அவர் தெரிவித்தார்.

Related posts: