தொடரும் போராட்டங்கள் – பொதுமக்கள் பெரும் பாதிப்பு!

ரயில்வே தொழிற்சங்கங்கள் ஆரம்பித்துள்ள பணிபகிஷ்கரிப்பு இன்றும் (28) தொடர்கிறது. சம்பள பிரச்சினைக்கு உரிய தீர்வினை பெற்றுத் தருமாறு கோரி கடந்த புதன் கிழமை (25) நள்ளிரவுமுதல் இந்த தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.
இதேவேளை, ஆசிரியர் மற்றும் அதிபர்களின் தொழிற்சங்க நடவடிக்கை நேற்று மற்றும் நேற்று முன்தினம் முன்னெடுக்கப்பட்ட நிலையில், அரச நிர்வாக அதிகாரிகள் மற்றும் நிர்வாக சேவை சங்கம் முன்னெடுத்துள்ள பணிப்பகிஷ்கரிப்பு இன்றும் தொடர்கின்றது.
சம்பள முரண்பாட்டு பிரச்சினை உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து இவர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்த தொழிற்சங்க நடவடிக்கைகள் காரணமாக பொதுமக்களின் அன்றாட நடவடிக்கைகள் இன்றும் பாதிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
2018 ஆம் ஆண்டு 3 பில்லியன் ரூபாய் செலவில் அதி நவீன மின்சார கட்டமைப்பு : மோசடிகள் ஏற்பட்டிருக்கலாம் ...
யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையத்தில் பிறந்தநாள் கொண்டாடிய கும்பலைச் சேர்ந்த மேலும் ஜவர் கைது!
யாழ் பொது நூலகம் எரிக்கப்பட்டு இன்றுடன் 43 ஆண்டுகள் பூர்த்தி!
|
|