தேர்தலில் போட்டியிடுவதற்காக இதுவரை 33 பேர் களம் இறங்கியுள்ளனர் – தேர்தல்கள் ஆணைக்குழு!
Saturday, October 5th, 2019
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக அமைச்சர் சஜித் பிரேமதாச, சமல் ராஜபக்ஷ உட்பட 5 பேர் நேற்று (04) கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னாயக்க தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சி முன்னணி சார்பில் போட்டியிடுவதற்கு சஜித் பிரேமதாச இன்று கட்டுப்பணம் செலுத்தினார். இதேவேளை சுயேட்சைக் குழுவில் போட்டியிடுவதற்காக சமல் ராஜபக்ஷவும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.
குமார வெல்கம, மஹேஷ் சேனநாயக்க, துமிந்த நாகமுவ ஆகியோரும் நேற்றும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக நேற்று மாலை வரையில் 33 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக பணிப்பாளர் சமன் ரட்நாயக்க குறிப்பிட்டார்.
Related posts:
கற்கோவளம் பாடசாலை அதிபர் வெற்றிடத்திற்கான விண்ணப்பங்கள் கோரல்!
இன்றும் மழை பெய்யும் சாத்தியம் – வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு!
தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என த.தே.கூட்டமைப்பு இனி கூறமுடியாது - ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவிப...
|
|
|


