தரம் ஒன்று மாணவர் சுற்று நிருபம் மறுசீரமைக்கப்பட வேண்டும் – கல்வி அமைச்சின் செயலாளர்!
Monday, January 13th, 2020
தரம் ஒன்றுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளுவதற்கான சுற்று நிருபம் மறுசீரமைக்கப்பட வேண்டும் என்று கல்வி அமைச்சின் செயலாளர் என்.எச்.எம். சித்ரானந்த தெரிவித்தார்.
கல்வித் துறையில் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படவுள்ளன என்றும் இதற்கான யோசனைகளை வழங்குவதற்கு விசேட செயலணி ஒன்று ஏற்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இது விடயம் தொடர்பில், ஆலோசனை முன்வைப்பதற்கு பொதுமக்களுக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
இலவசக் கல்வித் துறையில் சவாலுக்கு உட்படுத்தப்பட்ட பல்வேறு விடயங்கள் குறித்து தற்சமயம் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இவற்றில் ஒன்று கல்லூரி அதிபர் சேவையாகும். ஆசிரியர் சேவை உட்பட கல்வித் துறையில் ஏனைய சேவைகளை ஒருங்கிணைப்பதன் அவசியம் குறித்தும் அவர் வலியுறுத்தினார். தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கை ஆயிரம் வரை அதிகரிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கல்வி அமைச்சின் செயலாளர் என்.எச்.எம். சித்ரானந்த மேலும் தெரிவித்தார்
Related posts:
|
|
|


