தபால் மூல வாக்களிப்பு தொடர்பில் மாற்றம்..?
Monday, September 30th, 2019
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் தினம் இன்றுடன் நிறைவடையவிருந்த நிலையில், குறித்த கால வரையறையை நீட்டிப்பது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு தற்போது கவனம் செலுத்தியுள்ளது.
இது தொடர்பில் இன்று இடம்பெறும் ஆணைக்குழு சபை கூட்டத்தில் முடிவெடுக்கப்படவுள்ளதாக அதன் செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் கடந்த 18 ஆம் திகதி முதல் ஏற்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கொரோனா சிகிச்சைக்காக 28 ஆயுர்வேத வைத்தியசாலைகளை பெற்றுக்கொள்ள நடவடிக்கை - உள்நாட்டு மருத்துவ ஊக்குவி...
சட்டவிரோத மணல் அகழ்வு; தர்மபுரத்தில் ஐவருடன் உழவு இயந்திரங்களும் பறிமுதல்!
நிலைபெறுதகு அபிவிருத்தி இலக்குகள் பற்றிய மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பங்கேற்பு!
|
|
|


