தபால் மூலம் வாக்களிப்பதற்கான வாக்காளர் அட்டை தபால் திணைக்களத்திடம் கையளிப்பு!

ஜனாதிபதி தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கான வாக்காளர் அட்டைகளை தபால் திணைக்களத்திடம் கையளிக்கும் பணி மாவட்ட மட்டத்தில் இன்று இடம்பெறும் என்று தேர்தல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்காக 6 இலட்சத்து 59 ஆயிரத்து 514 பேர் தகுதி பெற்றுள்ளனர். தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் 31 ஆம் திகதியும் நவம்பர் மாதம் முதலாம் திகதியும் இடம்பெறவுள்ளது.
பொலிஸார், மாவட்ட செயலகம் மற்றும் தேர்தல் அலுவலக அதிகாரிகள் ஆகியோர் அடுத்த மாதம் 4 ஆம் திகதி தபால் மூலம் வாக்களிக்க முடியும்.
இந்த 2 சந்தர்ப்பங்களிலும் தபால் மூலம் வாக்களிக்க முடியாதோருக்கு நவம்பர் மாதம் 7 ஆம் திகதி அதற்கான சந்தர்ப்பம் வழங்குவதாகவும் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
Related posts:
இளம் வாக்காளர்கள் வாக்களிக்க அதிக ஆர்வத்தை வெளிபடுத்தவில்லை!
சேர்பியாவின் முதலாவது உதவிப் பிரதமர் இலங்கை விஜயம்!
எரிபொருள் விலை குறைப்பின் பயன் மக்களுக்கு - உடனடி நடவடிக்கை குறித்து நிதி அமைச்சின் அறிவிப்பு!
|
|