தபால்மூல வாக்களிப்பது தொடர்பான சுற்றுநிரூபம்!
 Tuesday, September 24th, 2019
        
                    Tuesday, September 24th, 2019
            
எதிர்வரும் ஜனாதிபதிதேர்தலில் தபால்மூல வாக்களிப்பது தொடர்பான சுற்றுநிரூபம் உரிய அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தேர்தல் செயலகம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்காக இம்மாதம் 30 ஆம் திகதி இரவு 12 மணிக்கு முன்னர் விண்ணப்பிக்கலாம். இந்த கால எல்லைநீடிக்கப்பட மாட்டாது.
விண்ணப்பங்கள் கிடைத்தவுடன் அதனை உறுதிப்படுத்தி தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு வழங்குவது அவசியமாகும். தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்வதற்குரிய 2018ஆம் ஆண்டுக்கான தேர்தல் இடாப்பை தேர்தல் ஆணைக்குழுவின் இணையத்தளத்தின் ஊடாக அல்லது 1919 தொலைபேசி இலக்கத்தின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
வறிய குடும்பத்திற்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியினரால் கூரைத்தகடுகள் வழங்கிவைப்பு!
மேற்கு முனைய அபிவிருத்தி தொடர்பில் அதானி நிறுவனம் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!
40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அடையாள அட்டை வழங்குவதற்கான கால அவகாசம் ஜூன் 30 ஆம் திகதி வரை நீடிப்பு...
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        