டீசல் – பெற்றோல் இறக்குமதி ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்

2019ஆம் ஆண்டு ஒக்டோபர் முதலாம் திகதி தொடக்கம் 2020 மே மாதம் 31ஆம் திகதி வரையில டீசல் மற்றும் ஜெட் ஏ-1 ஐ இறக்குமதி செய்வதற்கான நீண்டகால ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அதன்படி, குறித்த 8 மாத காலப்பகுதிக்குள் 1.04 மில்லியன் டீசல் பீப்பாய்களையும் 1.28 மில்லியன் ஜெட் ஏ-1 பீப்பாய்களையும் இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பெருந்தெருக்கள் மற்றும் வீதி அபிவிருத்தி மற்றும் கனிய வள அபிவிருத்தி அமைச்சர் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட விசேட நிலையியற் பெறுகைக்குழுவின் சிபாரிசுக்கமைய ஐக்கிய அரபு எமிரேட் இராஜ்யத்தின் M/s Mena Energy DMCC என்ற நிறுவனத்திடம் இருந்து இறக்குமதி செய்யப்படவுள்ளது.
Related posts:
பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் - பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்
சூழல்நேய பிரச்சாரத்திற்கான சான்றிதழ் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு வழங்கப்பட்டுள்ளது!
வங்குரோத்து நிலையிலிருந்து விடுபட்ட பெருமைமிக்க நாட்டைக் கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைய வேண்டும் - ஜ...
|
|