ஜி.எஸ்.பி பிளஸ் : ஐரோப்பிய ஒன்றியக்குழுவொன்று இலங்கை விஜயம்!

ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையின் நடைமுறை குறித்து உண்மையை கண்டறிய ஐரோப்பிய ஒன்றியக்குழுவொன்று இலங்கை வந்துள்ளது.
குறித்த குழு உரிய அதிகாரிகளையும், ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையுடன் தொடர்புடைய தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது மனித உரிமைகள் தொடர்பான விடயங்கள் குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும் இந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான விஜயம் விசேட விஜயம் இல்லையெனவும்,வருடத்துக்கு ஒருமுறை வழமையாக இடம்பெறும் விஜயமாகவே கருதப்படுவதாக இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Related posts:
புலவர் மணி மாதாஜி அம்மையார் காலமானார்
யாழ் மாவட்டத்தின் நாடாளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கையில் மாற்றம்!
கொரோனா தொற்று - இலங்கையில் முக்கிய பரீட்சைகள் பிற்போடப்பட்டன - பரீட்சைகள் ஆணைக்குழு அறிவிப்பு!
|
|