சட்டவிரோத சுவரொட்டிகளை நீக்க 1,045 பணியாளர்கள் – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்!
Wednesday, October 9th, 2019
ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய சட்டவிரோத சுவரொட்டிகள், பதாகைகளை நீக்கும் நடவடிக்கைகளுக்காக பொலிஸ் நிலையங்களில் 1,045 பணியாளர்களை இணைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
இவ்வாறு சட்டவிரோத சுவரொட்டிகள், பதாகைகளை காட்சிப்படுத்துவோரை கைது செய்து வழக்குத் தாக்கல் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத பதாதைகள், சுவரொட்டிகள் உள்ளிட்டவற்றை நீக்குவதற்காக சுமார் 46 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது
Related posts:
அபிவிருத்தி உத்தியோகத்தருக்கான சம்பள அளவுத் திட்டத்தை மாற்றவும்! வடக்கு மாகாண அரசசேவைப் பட்டதாரி உத...
அனைத்து பாடசாலைகளிலும் சுகாதார வழிமுறைகள் கடுமையாக பின்பற்றப்பட வேண்டும் - கல்வி அமைச்சர் பேராசிரியர...
துறைமுகத்தில் சிக்கியுள்ள அத்தியாவசிய பொருட்களை விடுவிக்க நடவடிக்கை - வர்த்தக அமைச்சர் இணங்கியுள்ளதா...
|
|
|


