குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை கண்டுபிடிக்க வருகிறது புதிய தொழில்நுட்பம்!

குற்றச்செயல்களுடன் தொடர்புபட்ட சந்தேக நபர்களை கண்டுபிடிப்பதற்காக முகங்களை அடையாளம் காணும் தொழிநுட்பத்தை உபயோகிப்பதற்கான பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாக பொலிஸ் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இலங்கை பொலிஸ் திணைக்களம், குடிவரவு குடியகல்வு திணைக்களம், ஆள்களைப் பதிவு செய்யும் திணைக்களம் மற்றும் சிறிலங்கா டெலிகொம் ஆகியன ஒன்றிணைந்து தரவுத் தொகுதிகளை தொடர்புபடுத்தி இந்த பொலிஸ் தொடர்பாடல் கட்டமைப்பினை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் மற்றும் சட்டத்தின் பிடியிலிருந்து விலகிச் செல்பவர்கள் பற்றிய தகவல்கள் குறித்த கட்டமைப்பிற்கு உட்படுத்தப்படுவதுடன், எந்தவொரு பொலிஸ் அதிகாரியும் எவ்விடத்திலிருந்தும் அலைபேசியின் ஊடாக அக்கட்டமைப்புடன் தொடர்பு கொண்டு குற்றவாளிகளை அடையாளம் காணமுடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
இதனூடாக குற்றவாளிகளை துரிதமாக சட்டத்தின் முன்கொண்டு செல்லவும் போக்குவரத்து குற்றங்களை கண்காணிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் மூத்த பொலிஸ் அதிகாரிகளுக்குமிடையே இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே இவ்வாறு கருத்து தெரிவிக்கப்பட்டது.
Related posts:
|
|