கல்வியியல் கல்லூரிகளுக்கு நிரந்தர பீடாதிபதிகள் – கல்வி அமைச்சு!
Monday, January 13th, 2020தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்காக நிரந்தர பீடாதிபதிகளை நியமிப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
பல வருடங்களாக குறித்த தேசிய கல்வியியல் கல்லூரிகளில் பதில் பீடாதிபதிகளே பீடாதிபதிகளாக செயற்பட்டதாகவும், இதன்காரணமாக தேசிய கல்வியியல் கல்லூரிகளின் நிர்வாக நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சின் செயலாளர் M.H.M. சித்ரானந்த தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தகுதிவாய்ந்தோருக்கு நாளை(13) நடைபெறவுள்ள நேர்முகத்தேர்வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன், நேர்முகத்தேர்வில் சித்தியடைபவர்கள், பீடாதிபதிபதி, உப பீடாதிபதி மற்றும் ஏனைய பிரதான பதவிகளுக்கும் நியமிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
Related posts:
சிகிரியாவுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் இணையத்தில் டிக்கெட்டுகளை கொள்வனவு செய்யமுடியும்!
வடக்கில் நிலக்கண்ணிகளை அகற்ற அவுஸ்திரேலியா நிதியுதவி!
உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர் பட்டியல் வெளியீடு!
|
|
|


