எதிர்வரும் செவ்வாய்கிழமை நாடாளுமன்ற தெரிவுக் குழு மீண்டும் கூடும்!
Friday, August 2nd, 2019
கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி தாக்குதல் தொடர்பில் ஆராயும் நாடாளுமன்றத் தெரிவுக் குழு மீண்டும் எதிர்வரும் செவ்வாய்கிழமை ஒன்று கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அன்றைய தினம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சாட்சி வழங்க அழைக்கப்பட்டுள்ளதுடன், சட்ட மற்றும் ஒழுங்குகள் அமைச்சர்களாக இருந்த சாகல ரத்நாயக்க மற்றும் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோரும் சாட்சி வழங்க அழைக்கப்படடுள்ளனர்.
மேலும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தனவும் சாட்சி வழங்க அழைக்கப்பட்டிருப்பதாக தெரிவுக்குழு அறிவித்துள்ளது.
Related posts:
அஞ்சல் ஊழியர்கள் அர்ப்பணிப்புடன் கடமையாற்ற வேண்டும்!
ஒரே நாடு ஒரே நீதி - நாட்டில் எந்தவொரு நபரும் பாதுகாப்பு தொடர்பில் அச்சம் இன்றி வாழ்வதற்கான சூழ்நிலை...
கல்வியில் மறுசீரமைப்பு மிகவும் அவசியம் - ஒத்துழைக்குமாறு பொதுநலவாய அமைப்பிடம் கோரும் ரணில்!
|
|
|


