இலங்கை வானிலையை ஆய்வு செய்ய அமெரிக்க நிபுணர்கள் வருகை!

இலங்கை வளிமண்டலத்தில் ஏற்படும் குழப்பநிலை மற்றும் மாற்றங்களை ஆய்வு செய்வதற்காக அமெரிக்க நிபுணர்கள் குழுவொன்று இலங்கைக்கு வந்துள்ளது.
இலங்கை மற்றும் அமெரிக்கா இணைந்து மேற்கொள்ளவுள்ள இந்த ஆய்வில் அமெரிக்க விமானப் படைக்கு சொந்தமான ஹூரிகேன் ஹன்டர்ஸ் படையை சேர்ந்த விமானிகள் சிலரும், காலநிலை ஆய்வு குறித்த நிபுணர்களும் இலங்கைக்கு வந்துள்ளதாக சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளது.
அவர்கள் சுமார் 10 நாட்கள் நாட்டில் தங்கியிருந்து இந்த ஆய்வினை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளதுடன், இதில் இலங்கையை சேர்ந்த நிபுணர்களும் இணைந்து கொள்ளவுள்ளனர்.
Related posts:
சுன்னாகம் இளைஞர் படுகொலை: சாட்சியங்களின் விபரம்!
யூரியா உரம் இன்றுமுதல் விநியோகிக்கப்படும் - விவசாய அமைச்சு அறிவிப்பு!
அனுமதியின்றி ஊடுருவும் நீர்மூழ்கி கப்பல்களை தடுக்கவும் கண்காணிக்கவும் அமெரிக்காவிடம் உதவி கோரப்பட்டு...
|
|