இலங்கை – மாலைதீவு நாடாளுமன்றங்களை ஒருங்கிணைக்க பேச்சு!
Thursday, October 10th, 2019
இலங்கை – மாலைதீவு பாராளுமன்றங்களை ஒருங்கிணைத்து செயற்படுவதன் மூலம் ஆலோசனை மற்றும் பங்களிப்பை பகிர்ந்து கொள்வது தொடர்பில் அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கும் மாலைதீவு சபாநாயகர் முஹம்மட் நசீட்டுக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று மாலைதீவு நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.
சார்க் உயர்கல்வி அமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மாலைதீவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அங்கு பல்வேறு உயர்மட்ட கலந்துரையாடல்களில் கலந்துகொண்டார்.
அதனையடுத்து மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய சபாநாயகருமான முஹம்மட் நசீட்டும் இடையில் பூர்வாங்க கலந்துரையாடலொன்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. இலங்கை – மாலைதீவு நாடாளுமன்றங்களை ஒருங்கிணைத்து செயற்படுவதன் மூலம் ஆலோசனை மற்றும் பங்களிப்பை பகிர்ந்து கொள்வது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டன.
Related posts:
|
|
|


