இலங்கையில் அறிமுகமாகும் சூரியசக்தி முச்சக்கர வண்டி!
Friday, December 13th, 2019
இலங்கையில் முதல் முறையாக சூரிய சக்தியில் இயங்கும் முச்சக்கர வண்டி கட்டமைப்பு ஒன்று அறிமுகம் செய்யப்படவுள்ளது.
நிலையான எரிசக்தி ஆணையம் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரிய அரசாங்கத்தின் உதவியின் கீழ் சூரிய சக்தி முச்சக்கர வண்டி கட்டமைப்பு நாளையதினம் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இது தொடர்பான நிகழ்வு அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் நடைபெறவுள்ளது.
எரிபொருள் பயன்படுத்தாமல், முச்சக்கர வண்டியில் பொருத்தப்பட்டுள்ள சூரிய சக்தி கட்டமைப்பு மூலம் அதன் பட்டரி சார்ஜ் செய்யப்பட வைப்பதே இதன் சிறப்பு அம்சமாகும்.
Related posts:
கிராம அலுவலரின் வீட்டுக்குள் அத்துமீறிய கும்பல் அட்டகாசம்! ஜன்னல், மோட்டார் சைக்கிள்கள் அடித்துடைப்...
இலங்கையில் கொரோனாவால் மேலும் 215 உயிரிழப்புகள் பதிவு - சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவ...
“வர்த்தக நட்பு சூழலை” உருவாக்கும் நோக்குடன், ஏழு செயலணிகள் - ஜனாதிபதி அலுவலகம் அறிவிப்பு!
|
|
|


