இந்தியப் பிரதமர் மாலைத்தீவு மற்றும் இலங்கைக்கு விஜயம்!
Wednesday, June 5th, 2019
அண்டை
நாடுகளை முதன்மைப்படுத்தும் இந்தியாவின் கொள்கையை மையப்படுத்தியே, இந்திய பிரதமர் நரேந்திர
மோடியின் மாலைத்தீவு மற்றும் இலங்கைக்கான விஜயம் அமையவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறதாக
இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 8ம் மற்றும் 9ம் திகதிகளில் அவர் மாலைத்தீவுக்கும் இலங்கைக்கும் விஜயம் செய்யவுள்ளார். இரண்டாவது தடவையாகவும் பிரதமராக பதவி ஏற்றதன் பின்னர் நரேந்திரமோடி மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டு விஜயம் இதுவாகும்.
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பின் பேரில் அவர் இலங்கை வருவதாக இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
Related posts:
தென்னிலங்கை மீனவர்களது அத்துமீறல் தடுக்கப்படும் - மஹிந்த அமரவீர!
ஜனாதிபதிக்கு அமெரிக்க உப ஜனாதிபதி தொலைபேசி அழைப்பு!
நாட்டை மீள திறக்க சுகாதார பரிந்துரைகளை முன்வையுங்கள் - அனைத்து பிரிவினருக்கும் ஜனாதிபதி பணிப்புரை!
|
|
|


