ஆட்சி பொறுப்பேற்றதும் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை – யாழ்ப்பாணத்தில் கோட்டபய உறுதியளிப்பு!
Monday, October 28th, 2019
எதிர்வரும் கார்த்திகை மாதம் 16 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்று நான் ஜனாதிபதியாக பதவியேற்றதும் சிறைகளில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வேன் என ஶ்ரீலங்கா பொது ஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபய ராஜபக்ச உறுதியளித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று நடந்த பிரசார கூட்டத்தில் உரையாற்றிய கோட்டபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் –
கடந்த காலத்தில் நான் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்தபோது 13,784 புலிகள் இயக்க போராளிகளை புனர்வாழ்வு அளித்து சமூகத்துடன் வாழ்வதற்கு வழிவகை செய்திருந்தேன். அவர்களுக்கான தொழில் வாய்ப்பு களையும் உருவாக்கி கொடுத்திருந்தோம். மிகுதி தமிழ் அரசியல் கைதிகளையும் விடுவிப்பது தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தபோது ஆட்சி மாற்றம் எற்பட்டதால் அது தடைப்பட்டுப்போனது.
ஆனால் இம்முறை தேர்தலில் நான் வெற்றிபெற்றதும் சிறையில் இருக்கும் ஏனைய தமிழ் அரசியல் கைதிகளையும் நான் விடுவிப்பேன் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்.
Related posts:
|
|
|


