அவுஸ்திரேலியாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்!
Friday, December 13th, 2019
சட்ட விரோத ஆட்கடத்தலுக்கு எதிராக இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா நாடுகளுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை செய்து கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அது தொடர்பான ஆரம்பகட்ட கலந்துரையாடல் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ மற்றும் அவுஸ்திரேலியா அரசாங்க அதிகாரிகளுக்கு இடையில் இடம்பெற்றுள்ளது.
ஆட்கடத்தலுக்கு எதிராக சரியான நேரத்தில் தீர்வு காண்பதற்காக இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட உள்ளது.
குறித்த கலந்துரையாடலுக்காக இலங்கை இராணுவத்தை பிரதிநிதித்துவப்படுத்து அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.
Related posts:
வாள்வெட்டு: யாழ்ப்பாணத்தில் ஒருவர் பலி – எழுவர் காயம்!
இறக்குமதி செய்யப்பட்டுள்ள சமையல் எரிவாயுவின் தரம் குறித்து ஆராய நடவடிக்கை - இராஜாங்க அமைச்சர் லசந்த ...
பொது எதிரியை எதிர்த்து நாடுகள் ஒன்றிணைந்து போராட வேண்டும் - நெருக்கடிக்கு தீர்வாக இலங்கைக்கு உருளைக...
|
|
|


