ஹங்கேரியின் வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகை!
Wednesday, January 12th, 2022
ஹங்கேரியின் வெளிவிவகார அமைச்சரான பீட்டர் சிஜ்ஜார்டோ ஒரு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று காலை நாட்டை வந்தடைந்துள்ளார்.
அத்துடன் ஹங்கேரியின் வெளிவிவகார அமைச்சருடன் 20 பேர் கொண்ட குழுவும் நாட்டுக்கு வருகைத் தந்துள்ளது.
இன்று அதிகாலை 4.40 மணியளவில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹங்கேரிய வெளிவிவகார அமைச்சர் மற்றும் தூதுக்குழுவினர் இன்று மாலை இலங்கைக்கான விஜயத்தை நிறைவு செய்து மாலை 4:30 மணிக்குப் புறப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
விபத்துக்களை குறைக்க வருகின்றது நான்கு சக்கரங்களைக் கொண்ட புதிய வாகனம் !
இந்திய பிரதமர் நரேந்திர மோடி - ஜனாதிபதி கோட்டப ராஜபக்ச இடையே அபிவிருத்தி உள்ளிட்ட பல முக்கிய விடயங்...
கடந்த நூற்றாண்டில் மனிதகுலத்தின் சிறு பகுதி இயற்கையை ஏய்த்துவிட்டது - பருவநிலை மாற்றத்தைச் சமாளிக்க...
|
|
|


