ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பண்டிகைக் கால வருமான பல மில்லியன்களால் அதிகரிப்பு!

கடந்த ஆண்டு 2021 டிசம்பரில் இலங்கை விமான சேவைக்குச் சொந்தமான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் 9.25 மில்லியன் அமெரிக்க டொலரையும் மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் 10.66 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் இலாபம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கோவிட் தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து இலங்கை விமான சேவைக்கு கிடைக்கப்பெற்ற அதிக இலாபகரமான ஒரு மாதமாகும்.
மேலும், விமானப் போக்குவரத்து சேவைகள் ரீதியாக டிசம்பர் 2021 இல் 11.43 மில்லியன் அமெரிக்க டாலர்களையும் பெற்றுள்ளதாக விமான சேவைகள் அறிக்கை குறிப்பிடப்படுள்ளது.
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக விமானப் போக்குவரத்திலிருந்து பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச லாபமாகும் எனவும் தெரிவிக்கப்படுகிறமை குறிஜப்பிடத்தக்கது..
000
Related posts:
மலேரியா தொற்றியிருந்தால் உடன் சிகிச்சையளிக்கவும்!
ஊழியர் நம்பிக்கை நிதிய அங்கத்துவ இலக்கமாக தேசிய அடையாள அட்டை இலக்கம்!
MCC கொடுப்பனவு இரத்து செய்யப்பட்டாலும் இலங்கைக்கான உதவிகள் தொடரும் - அமெரிக்கா அறிவிப்பு!
|
|