வோக்ஸ்வாகன் கார் நிறுவனம்   குளியாபிட்டியவில் ஆரம்பம்!

Friday, June 10th, 2016

வோக்ஸ்வாகன் கார் நிறுவனத்திற்கான நிர்மாணப்பணிகள் இன்னும் இரண்டு மாதத்தில் குளியாபிட்டியவில் ஆரம்பிக்கப்படும் என்று  கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.

ஐக்கியதேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று  நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முச்சக்கர வண்டிக்கான வரியை அதிகரித்துவிட்டு அமைச்சர்களுக்காக  கார் கொள்வனவு செய்வதற்கு கோடிக் கணக்கில் செலவிடப்படுகின்றதே இது நியாயமா?  என கெட்கப்பட்டதற்கு அவ்வாறு எண்ண வேண்டாம். யதார்த்ததை புரிந்துக்கொள்ள  வேண்டும். அமைச்சர்களுக்கு கட்டாயமாக வாகனம் இருக்க வேண்டும். இல்லையேல் தமது அன்றாட வேலைகளை செய்வது கடினமாகும்.

அமைச்சர்களுடன் கூடவே இருந்தால் உங்களுக்கு நன்றாக புரிந்து கொள்ள முடியும். அத்துடன் முச்சக்கர வண்டிக்கான வரி அதிகரித்தமைக்கு மாற்று வழிமுறையாகதான் 3 இலட்சம்   ரூபா பெறுமதியான கார்களை கொள்வனவு செய்வறத்கு தீர்மானித்துள்ளோம்.

நாட்டில் வாழும் அனைவரும் வாகனங்கள் வைத்திருக்க வேண்டும். அதற்கான திட்டமிடலின் பிரகாரமே நாம் பயணித்து கொண்டிருக்கின்றோம்.  இதன்பிரகாரம் குளியாபிட்டியவில் வோக்ஸ்வாகன்  கார் நிறுவனத்தின் நிர்மாணப்பணிகள்  இன்னும் இரண்டு மாதத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளன. அதன்பின்னர் இலங்கையிலிருந்து கார் தயாரிப்பு செய்யப்படும். தற்போது  வோட்ஸ் வோகன் கார் நிறுவன நிர்மாணத்திற்கான  தெரிவு செய்யப்பட்டுள்ள இடங்களுக்கு நஷ்டஈடு வழங்கப்பட்டுள்ளன என்றார்.

Volkswagen_assembly_plant_in__kuliyapitiya

Related posts:

வறியநாடுகளின் தடுப்பூசி செலுத்தும் முயற்சிகளிற்கு செல்வந்த நாடுகள் உதவவேண்டும் - இந்து சமுத்திர மாந...
வார இறுதியின் பின்னர் எரிபொருள் தட்டுப்பாடு இருக்காது - இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவிப்பு!
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்தை லங்கா சதொச ஊடாக இறக்குமதி செய்ய நடவடிக்...