வைத்தியர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்கு முன்மொழிவு – சுகாதார அமைச்சு தெரிவிப்பு!
Sunday, November 26th, 2023வைத்தியர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்கான முன்மொழிவுகளை சுகாதார அமைச்சு தயாரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி சேவையில் இணையும் வைத்தியர் ஒருவரின் அடிப்படை சம்பளத்தை 75,000 ரூபாவாக அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது. தற்போது வைத்தியர் ஒருவரின் முதல் சம்பளம் சுமார் 54,000 ரூபாவாகும்.
நீண்ட காலமாக தீர்க்கப்படாத சம்பளம் மற்றும் தொழில்சார் பிரச்சனைகள் காரணமாக வெளிநாடு செல்லும் வைத்தியர்கள் அதிகரித்துள்ள நிலையில் இது குறித்து சுகாதார அமைச்சின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
000
Related posts:
அரசாங்கத்தின் செயற்பாடுகளை சீர்குலைப்பதே எதிர்க்கட்சியின் நோக்கம் : பழைய நாடாளுமன்றத்தை கூட்டி பணத்த...
கல்விசார் ஊழியர்கள் எந்தவொரு கல்வி வலயத்திலும் தடுப்பூசியை பெற்றுக் கொள்ளலாம் – அரசாங்கம் கோரிக்கை!
2024 ஆம் ஆண்டு நாட்டில் வர்த்தக நடவடிக்கைகளில் பாரிய மாற்றம் ஏற்படும் - இலங்கை மத்திய வங்கியின் ஆளுந...
|
|