வைத்தியரின் காரை பந்தாடியது புகையிரதம்: மயிரிளையில்உயிர் தப்பினார் பெண் வைத்தியர்!

யாழ். காங்கேசன்துறை ரயில் நிலையத்திலிருந்து யாழ். பிரதான புகையிரத நிலையம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த புகையிரதத்துடன் கார் மோதி விபத்துக்குள்ளாகியதில் பெண் வைத்தியரொருவர் காயங்களின்றி உயிர் தப்பியுள்ளார். யாழ். இந்து மகளிர் கல்லூரிக்குப் பின்புறமாகவுள்ள ஆத்திசூடி விநாயகர் ஒழுங்கையிலுள்ள புகையிரதக் கடவையில் இன்று பிற்பகல்-01.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
பாதுகாப்பற்ற புகையிரதக்கடவையைச் சமநேரத்தில் கடப்பதற்கு எதிரெதிர் தரப்பில் வந்த காரும் முச்சக்கரவண்டியொன்றும் முயற்சித்துள்ளது. அச்சமயம் காங்கேசன்துறையிலிருந்து வந்துகொண்டிருந்த அதிசொகுசு புகையிரதம் குறித்த கடவையை நெருங்கியுள்ளது. அச்சமயம் முச்சக்கரவண்டியை அதன் சாரதி பின்புறமாக இயக்கியுள்ளார். அப்போது கார் புகையிரதத்துடன் கடுமையாக மோதுண்டு திரும்பியுள்ளது. இதன் போது குறித்த பெண் வைத்தியரின் கார் கடுமையான சேதங்களுக்குள்ளானது.
எனினும் , காரிலிருந்த பெண் வைத்தியர் அதிஸ்டவசமாகச் சிறு காயங்கள் எதுவுமின்றி தப்பித்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை கோப்பாய் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
Related posts:
இலங்கையுடன் வர்த்தக உடன்படிக்கை செய்வது தொடர்பில் நியுசிலாந்து கவனம்!
ஊழல்களுக்கு அங்கீகாரம் தேடுகிறார் சுமந்திரன் - குற்றம் சுமத்துகிறார் ஈ.பி.டி.பியின் யாழ். மாவட்ட மே...
தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபா சம்பளம் தொடர்பில் நாடாளுமன்றில் சட்டமூலம் - - தொழில் அமைச்சர் நிமல...
|
|