வைத்தியசாலை வளாகத்திற்குள் பொலித்தீன் பாவனைக்குத் தடை!
Friday, December 14th, 2018
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை வளாகத்திற்குள் பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் பொருள்களை கொண்டு செல்வதற்கும் பயன்படுத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனையின் சுற்றுச்சூழல் நலன் மற்றும் நோயாளர்களின் சுகாதாரம் கருதியே பொலித்தீன் பிளாஸ்ரிக் பாவனைகள் மருத்துவமனை வளாகத்திற்குள் தடை செய்யப்படுவதாக மருத்துவமனை அத்தியட்சகர் தெரிவித்தார்.
நோயாளர்கள் மற்றும் நோயாளர்களை பார்வையிட வருகின்றவர்கள் பொலித்தீன் பிளாஸ்ரிக் பொருள்களை கொண்டு வருவதைத் தவிர்க்குமாறும் கேட்டுகொண்டுள்ளனர்.
Related posts:
கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரிப்பு: பாதீட்டு விவாதத்திற்கான நாட்களை குறைப்பது குறித்து அவதானம்!
வேறு எந்த மிருகங்களுக்கும் கொவிட் தொற்று உறுதியாகவில்லை - வனஜீவராசிகள் இராஜாங்க அமைச்சர் அறிவிப்பு!
நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலையால் 25 பேர் உயிரிழப்பு - 2 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு எனவு...
|
|
|


