வைத்தியசாலைகளின் மின்கட்டண நிலுவை தொடர்பில் மின்சார சபையுடன் இணக்கம் – சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவிப்பு!
Friday, July 28th, 2023
அரச வைத்தியசாலைகள் ட்பட சுகாதார அமைச்சுக்கு சொந்தமான நிறுவனங்களில் செலுத்தப்படாத மின் கட்டணங்களை செலுத்துவதற்கு மின்சார சபையுடன் இணக்கம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறினார்.
இதன் போது தொடர்ந்து தெரிவித்த அவர், அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறினார்.
மேலும் இந்த கலந்துரையாடலின் போது, மருந்துப் பொருட்களை இறக்குமதி செய்தல் உள்ளிட்ட சுகாதாரத்துறையில் ஏற்பட்டுள்ள பல பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கட்டார் உயர்மட்ட தூதுக்குழு இலங்கை வருகை!
இலங்கையில் எரிபொருள் சுத்திகரிப்பு திட்டம் - ஓமான் மறுப்பு!
விதிமுறைகளை மீறிய 50 பேருந்துகளின் பயண அனுமதிப்பத்திரம் இரத்து - போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுக...
|
|
|


