வேலையற்ற பட்டதாரிகளை தொழில் முயற்சியாளராக்க திட்டம் – ஜனாதிபதி!

Friday, March 2nd, 2018

அரசியல் பேதமின்றி சகலருக்கும் நன்மை கிடைப்பதற்காக வேலையற்றபட்டதாரிகளுக்கு தொழில் வழங்கும் திட்டம் ஒன்றினை அமுலாக்கும் திட்டம் ஒன்றினை உருவாக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறி சேன ஆலோசனை வழங்கியுள்ளார்.

மேலும் இத்திட்டத்தை அமுலாக்குவது தொடர்பில் கிராம உத்தியோகத்தர்களின் உதவியையும் பெற வேண்டும்  எனவும் அவர் பணித்துள்ளார்.

மேலும் அரச வங்கிகள் தனிhர் மயமாவதையும் விபரித்த ஜனாதிபதி சமூகப்பிரச்சனைகளை முறையாக இனங்காணாது இருப்பதம் பொருளாதார வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்

இதன்போது இலங்கை வங்கி, மக்கள் வங்கி, அரச ஈட்டு முதலீட்டு வங்கி போன்றவை அடங்கலாக நிதி அமைச்சின் பொறுப்பில் இயங்கும் அரச வங்கிகள் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்களுக்காக அமுலாக்கும் கடன் திட்டங்கள் பற்றியும் ஜனாதிபதி இதன்போது கேட்டறிந்து கொண்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

Related posts: