வேலணை திருவள்ளுவர் சனசமூக நிலையத்திற்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியினால் தளபாடங்கள் வழங்கிவைப்பு!
Wednesday, December 14th, 2016
ஈழமக்கள் ஜனநாயக கட்சியினால் வேலணை திருவள்ளுவர் சனசமூக நிலையத்திற்கு தளபாடங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வேலணை பிரதேச நிர்வாகத்தினரிடம் குறித்த சனசமூக நிலைய நிர்வாகத்தினர் விடுத்திருந்த வேண்டுகோளுக்கிணங்க கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கிட்டின் மூலம் குறித்த சனசமூக நிலையத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.
இன்றையதினம் வேலணை பிரதேச செயலகத்தில் பிரதேச செயலர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்தகொண்ட ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வேலணை பிரதேச உதவி நிர்வாக செயலாளர் ஞானமூர்த்தி (யசோ) அவர்களால் குறித்த சனசமூக நிலைய நிர்வாகத்தினரிடம் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

Related posts:
நியாயமான கோரிக்கைகளை புறக்கணிப்பது வெட்கப்பட வேண்டிய விடயம்!
ஜனவரி மாதமே பொருத்தமானது – பிரதமர்!
இடமாற்றப்படும் பொலிஸ் பொறுப்பதிகாரிகள்!
|
|
|


