வெள்ளிக்கிழமையன்று எரிபொருள் விலை சூத்திரம்!

எரிபொருள் விலை சூத்திரம், நிதியமைச்சர் மங்கள சமரவீரவால் எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஊடகங்களுக்கு வழங்கப்படும் என பிரதியமைச்சர் அஜித் மான்னப்பெரும தெரிவித்துள்ளார்.
விலை சூத்திரத்தை தான் வழங்குவதாக பிரதியமைச்சர் அஜித் மன்னப்பெரும நேற்று தெரிவித்த கருத்து தொடர்பில் ஊடகவியலாளர்கள் அவரிடம் வினவிய போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருள் விலை சூத்திரம் ஊடகங்களுக்கு வழங்கப்படும் என பிரதியமைச்சர் அஜித் மான்னப்பெரும நேற்று காலை ஊடக அமைச்சில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து தெரிவித்திருந்தார்.
அது தொடர்பில் அன்று மாலை தமது அமைச்சிற்கு வருமாறும் பிரதியமைச்சர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
எச்சரிக்கை - யாழில் இரு வாரங்களில் 10 பேருக்கு பன்றிக் காய்ச்சல்!
கடற்பரப்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம் - பரிசோதனையை முன்னெடுத்தது நாரா நிறுவனம்!
வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் - நாட்டின் பல பகுதிகளில் கடும் மழை – வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்...
|
|