வெள்ளவத்தையில் பாரிய தீ விபத்து!

வெள்ளவத்தை W.C சில்வா மாவத்தைக்கு அருகாமையிலுள்ள காலி வீதியிலுள்ள கட்டட தொகுதிகளில் பாரிய தீ பரவல் ஏற்பட்டுள்ளது
குறித்த தீ விபத்தினை அணைக்கும் முயற்சியில் 10 இற்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. சம்பவம் தொடர்பில் வெள்ளவத்தை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தீ அனர்த்தம் காரணமாக 5 கடைகள் முழுமையாக எரிந்துள்ளதுடன் அருகிலுள்ள வீடொன்று பகுதியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையில் புதிய யாப்பு!
சேதப்படுத்தப்பட்ட நாணயங்களுக்கு மாற்றீடுகள் வழக்கப்படமாட்டாது!
இலங்கை - அமெரிக்கா இடையிலான பாதுகாப்பு வலுவான நிலையில்!
|
|