வெளிவிவகார அமைச்சராக திலக் மாரப்பன பதவியேற்பு!

ரவி கருணாநாயக்க பதவி விலகிய நிலையில் வெற்றிடமாக இருந்த வெளிவிவகார அமைச்சு பதவியை இன்றைய தினம், அமைச்சர் திலக் மாரப்பன பொறுப்பேற்கின்றார் என அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று காலை இந்த பதவியேற்பு நிகழ்வு இடம்பெறவுள்ளது.கடந்த வாரம் அமைச்சர் ரவி கருணாநாயக்க தமது பதவியை விட்டு விலகினார்.
இதனைத் தொடர்ந்து அந்த வெற்றிடத்திற்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க, ஹர்சடி சில்வா மற்றும் நவீன் திஸாநாயக்க உள்ளிட்டவர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன.எனினும் அந்த வெற்றிடத்திற்கு விசேட அபிவிருத்திகள் தொடர்பான அமைச்சர் திலக் மாரப்பன தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
Related posts:
சைட்டம் மருத்துவ கல்லூரி பொறுப்பேற்கப்பட மாட்டாது!
ட்ரோன் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்!
மத்திய கிழக்கில் தங்கியுள்ள இலங்கை பணியாளர்களை அழைத்துவர விரைவில் நடவடிக்கை - இலங்கை வெளிநாட்டு வேலை...
|
|