வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான விளம்பரங்களை நம்ப வேண்டாம் – வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பொதுமக்களிடம் அறிவுறுத்து!

Thursday, February 25th, 2021

வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெற்றுத்தருவதாக கூறி, சமூக வலைத்தளங்களின் ஊடாக மேற்கொள்ளப்படும் விளம்பரங்களை நம்பவேண்டாம் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பொதுமக்களிடம் அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு அந்த பணியகம் இந்த அறிவுறுத்தலை தெரிவித்துள்ளது.

சமூக வலைத்தளங்கள் ஊடாக வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெற்றுத்தருவதாக கூறி பலர் நிதி மோசடியில் ஈடுபட்டு வருவதாக குற்றப்புலனாய்வுப் திணைக்களத்திற்கு முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அந்த பணியகம் குறிப்பிட்டுள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு குறித்த விளம்பரங்கள் சட்டரீதியான வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களால் மின்னணு ஊடகம் மற்றும் பத்திரிக்கைகள் ஊடாக மாத்திரமே மேற்கொள்ளப்படும்.

எனவே, சமூக வலைத்தளங்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான விளம்பரங்களை நம்ப வேண்டாம் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பொதுமக்களை அறிவுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

இலங்கையை காற்றுடனும் பரவுகிறது கொவிட் - ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் விசேட வைத்தியர் எச்சரிக்க...
இலங்கையில் வருகிறது புதிய சட்டம் - சட்ட வரைவினை தயாரிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உத்தரவு!
எரிபொருள் விலை சூத்திரம் அடுத்த வாரம் அமைச்சரவைக்கு - வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில அறிவிப்பு!