வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்கள் இரண்டு கறுப்பு பட்டியலில் இணைப்பு!

போலியாக குடும்ப பின்னணி அறிக்கையை தயாரித்த இரண்டு வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களின் அனுமதிப்பத்திரங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது..
அத்துடன் குறித்த நிறுவனங்களை கறுப்பு பட்டியலில் சேர்க்க இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளது. மருதானை மற்றும் கிராண்ட்பாஸ் ஆகிய பிரதேசங்களில் உள்ள இந்த நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பணியகம் சுற்றிவளைப்பு தேடுதலை மேற்கொண்டிருந்தது.
அங்கிருந்து கைப்பற்றிய ஆவணங்களில் போலியாக தயாரிக்கப்பட்ட குடும்ப பின்னணி பற்றிய அறி்க்கை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர், குறித்த நிறுவனங்களின் அனுமதிப்பத்திரங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன
Related posts:
சுகாதாரச் சீர்கேட்டுடன் இயங்கி வந்த விடுதியின் உரிமையாளருக்கு தண்டம்!
போதைப்பொருள் பயன்பாட்டால் குற்றச் செயல்கள் அதிகரிப்பு - பொலிஸ் மா அதிபர்!
அரச மருந்தாளர்கள் சுகயீன விடுமுறையில் !
|
|