வெளிநாட்டு வேலைக்கு செல்லும் பெண்களுக்கு விசேட பயிற்சி!
Sunday, January 22nd, 2017
வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக செல்லும் பெண்கள் பல்வேறுபட்ட இன்னல்களுக்கு முகங்கொடுக்க நேரிடுவது, அவர்களின் அறியாமை காரணமாகவே என்று பிரதியமைச்சர் அனோமா கமகே தெரிவித்துள்ளார்.
அதன்காரணமாக அவர்களுக்கு சரியான பயிற்சி வழங்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கான பயிற்சி நிலையம் ஒன்றை அம்பாறையில் ஆரம்பிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்து கொண்டிருந்த அமைச்சர் இவ்வாறு கூறினார்.
வாழ்வாதாரத்திற்காக பெண்கள் வெளிநாட்டு வேலைகளுக்கு செல்வதை தான் அனுமதிப்பதில்லை என்ற போதிலும், அதற்கு மாற்றீடு தற்போதைக்கு இல்லை என்று அவர் சுட்டிக்காட்டினார்.
அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதற்காக அதற்கு பொறுப்பான அமைச்சரினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுக் கொண்டிருப்பதாக தெரிவித்தார்

Related posts:
கர்ப்பிணிப் பெண் படுகொலை : கணவருக்கும் அயலவருக்கும் நீதிமன்றம் உத்தரவு!
இலங்கை கொரோனா தொற்றின் ஆபத்தான நிலையிலிருந்து மீண்டெழுந்துவிட்டது ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக் கழகத்தின்...
நாட்டின் பொருளாதாரத்தை வழமைக்கு கொண்டு வர எதிர்பார்ப்பு - இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீ...
|
|
|


